அ.தி.மு.க.வினாின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்எம்.புதூரில் 18 ஏக்காில் புதிய புறநகர் பஸ் நிலையம்மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்
அ.தி.மு.க.வினாின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் எம்.புதூரில் 18 ஏக்காில் புதிய புறநகா் பஸ் நிலையம் அமைக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கடலூர் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அாிசிபொியாங்குப்பம் ஊராட்சி எம்.புதூா் கிராமத்தில் 17.88 ஏக்காில் புதிய புறநகா் பஸ் நிலையம் அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. கவுன்சிலர்கள் பிரகாஷ், கீதா குணசேகரன், கர்ணன், சரத், தமிழரசன், பாரூக் அலி, ராதிகா உள்ளிட்ட 10 பேர், தங்கள் வார்டுகளில் இதுவரை எந்தவொரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்றனர். அதற்கு மேயர் சுந்தரி, நீங்கள் யாரிடம் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தீர்கள். உங்கள் கோரிக்கை குறித்து என்னிடம் மனு அளியுங்கள், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இருப்பினும் தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பாதாள சாக்கடை துண்டிப்பு
நடராஜன் (தி.மு.க.) : எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் பாதாள சாக்கடை இணைப்புக்கான கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார். அருள்பாபு: கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகே அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும். பழைய கலெக்டர் அலுவலக சாலையில் இருபுறமும் விவசாயிகள் போக்குவரத்துக்கு இடையூறாக காய்கறி மற்றும் பழங்கள் வைத்து விற்பனை செய்கின்றனர். அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
பரபரப்பு
சங்கீதா (அ.தி.மு.க.) : கடலூர் புதிய பஸ் நிலையத்தை எம்.புதூரில் அமைக்க மாநகராட்சியால் தீர்மானம் போடப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். கலெக்டர் அலுவலகம் அருகில் தான் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். எம்.புதூர் பகுதியில் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.
மேயர் சுந்தரி: கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைத்தால், வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்ததன் அடிப்படையில் தான் எம்.புதூரில் அமைக்கப்பட உள்ளது என்றார். அதனை ஏற்றுக் கொள்ளாத கவுன்சிலர் சங்கீதா மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத்குமார், பரணிமுருகன் உள்பட 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அடுத்தடுத்து தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என 16 பேர் வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வரி விலக்கு
இதையடுத்து துணை மேயர் தாமரைச்செல்வன் பேசுகையில்:- ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக குடிசை வீட்டில் வாழும் மக்களுக்கு காலம் காலமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையே தொடர வேண்டும். கடலூர் தலைமை தபால் நிலையம், ஆட்டோ நிறுத்தம் அருகே மாநகராட்சி கழிப்பிடம் வரக்கூடாது. அதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள கழிப்பிடத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு விட வேண்டும். மேலும் மாநகராட்சியில் 45 வார்டுக்கும் சேர்த்து ஒரே ஒரு பிளம்பர் மட்டும் உள்ளார். மாநகராட்சியில் துப்புரவு அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது போன்று பிளம்பர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
ஆணையாளர் நவேந்திரன்: கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.