குத்துச்சண்டை வீரர்களுக்கு ரூ.1 லட்சம் விளையாட்டு உபகரணங்கள் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்


குத்துச்சண்டை வீரர்களுக்கு ரூ.1 லட்சம் விளையாட்டு உபகரணங்கள் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குத்துச்சண்டை வீரர்களுக்கு ரூ.1 லட்சம் விளையாட்டு உபகரணங்களை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்

கடலூர்

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் ஏற்பாட்டின்பேரில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெறும் குத்துச்சண்டை வீரர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ். ராஜா தலைமை தாங்கினார்.

கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை குத்துச்சண்டை வீரர்கள், வீராங்கனைகளுக்கு வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திக், மண்டல தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷினி ராஜா, ஆராமுது, பயிற்சியாளர்கள் சிவராஜ், இளவரசன், அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story