கடலூரில் ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில் ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கடலூரில் ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். இலவச மருத்துவம் அல்லது இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயில்வே கட்டண சலுகைகள் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் காலம் தாழ்த்தாமல் உயர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரட்சகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி வரவேற்றார். என்.எல்.சி. ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் ஆண்டகுருநாதன், டி.என்.சி.எஸ்.சி. கோபால், துணை தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய சங்க துணை தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் இணை செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் செல்வராஜ், ராஜகோபால், விஸ்வநாதன், சோமசுந்தரம், சிவராஜ் அருணாசலம், ராஜவேலு, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் பொருளாளர் பத்மநாபன் நன்றி கூறினார்.


Next Story