வீட்டின் உரிமையாளர், என்ஜினீயர் மீது வழக்கு


வீட்டின் உரிமையாளர், என்ஜினீயர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து காயம் அடைந்ததால் வீட்டின் உரிமையாளர், என்ஜினீயர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை,:

தரங்கம்பாடி தாலுகா மேலபெரும்பள்ளம் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதிராஜன். இவருடைய மகன் கார்த்திக்ராஜா (வயது 39). கம்பி பிட்டரான இவர் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ராகவேந்திரா நகரில் ராஜா என்பவருக்காக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். பணியின் போது திடீரென கார்த்திக்ராஜா கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக்ராஜா மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கார்த்திக்ராஜா கொடுத்த புகாரின் பேரில் கட்டிட வேலையில் ஈடுபடுவதற்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்யாத வீட்டின் உரிமையாளர் ராஜா மற்றும் இந்த பணியை மேற்பார்வையிட்டு வரும் என்ஜினீயர் வீரமணி ஆகிய 2 பேர் மீதும் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story