உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதிவாசி வேடம் அணிந்து போராட்டம்


உளுந்தூர்பேட்டையில்    சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதிவாசி வேடம் அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதிவாசி வேடம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 32-வது நாளாக நீடித்தது. இதில், சுங்கச்சாவடி ஊழியர்கள் மரக்கிளைகளை கட்டியபடி, ஆதிவாசி வேடத்தில் நூதன முறையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட போனஸ்களை உடனடியாக வழங்குதல் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களுக்கான நீதி கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, தற்போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் முறையில் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story