நாய் துரத்தியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு


நாய் துரத்தியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 10 July 2023 2:39 AM IST (Updated: 10 July 2023 5:37 PM IST)
t-max-icont-min-icon

நாய் துரத்தியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருச்சி

முசிறி:

அரிவாள் வெட்டு

முசிறி அருகே உள்ள பூமாலைபுரத்தை சேர்ந்த ஸ்ரீரங்கனின் மகன் அபிஷேக்(வயது 20). இவர் தும்பலம் கிராமத்தில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் ராவணன் என்ற ராஜேஷ்குமார் (30) என்பவர் வளர்த்து வரும் நாய் தெருவில் வந்தவர்களையும், அபிஷேக்கையும் துரத்தியதாக தெரிகிறது.

இது தொடர்பாக அபிஷேக், ராஜேஷ்குமாரிடம் நாயை கட்டிப்போட்டு வளர்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஷ்குமார் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து அபிஷேக்கை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபிஷேக் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கைது

இது குறித்து அவர், முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜேஷ்குமாரை கைது செய்தார். ராஜேஷ்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story