தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசுடன் சி.வி.சண்முகம் எம்.பி. சந்திப்பு
தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை சி.வி.சண்முகம் எம்.பி. மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
விழுப்புரம்
திண்டிவனம்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர், மரியாதை நிமித்தமாக இன்று திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை நேரில் சந்தித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் சி.வி.சண்முகத்துக்கு பூங்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு இருவரும் தனியாக அரசியல் நிலவரம் குறித்து சிறிது நேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜுனன், பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க. தலைவர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story