சேலத்தில் வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


சேலத்தில் வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

சேலத்தில் வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

ஆன்லைன் வர்த்தகம்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கோகுல் கண்ணன் (வயது 25). இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் பேசினார். அப்போது அவர், அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதை உண்மை என நம்பிய கோகுல் கண்ணன், மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சம் செலுத்தினார். ஆனால் அதன்பிறகு அவரிடம் வர்த்தகம் தொடர்பாக மர்ம நபர் ஏதும் பேசவில்லை. மேலும் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என வந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுல் கண்ணன் இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இந்த மோசடி தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story