அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:30 AM IST (Updated: 16 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் அண்ணா பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் தர்மபுரியில் நேற்று நடைபெற்றன.

பென்னாகரம் ரோட்டில் தனியார் பள்ளி அருகில் நடைபெற்ற விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவ-மாணவிகள்

இந்த போட்டியில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது.

இதேபோன்று 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பரிசு, சான்றிதழ்

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. முதல் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டன. இதேபோல் போட்டியில் கலந்து கொண்டு 4 முதல் 10 இடங்களை பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.250 ஊக்க பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகை மற்றும் சான்றிதழை கலெக்டர் சாந்தி வழங்கி, மாணவ-மாணவிகளை பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில் செல்வம், விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story