சென்னையை நெருங்கும் தீவிர புயல் மாண்டஸ் ... அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்...!


சென்னையை நெருங்கும் தீவிர புயல் மாண்டஸ் ... அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்...!
x
தினத்தந்தி 9 Dec 2022 9:18 AM IST (Updated: 9 Dec 2022 9:32 AM IST)
t-max-icont-min-icon

தீவிர புயலான மாண்டஸ் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் தீவிர புயலான மாண்டஸ் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். தீவிரப்புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரைக்காலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தீவிர புயலாக உள்ள மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.

புயல் இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்' என்றார்.


Next Story