சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து


சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து
x

நாங்குநேரி அருகே சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கியாஸ் சிலிண்டர் லாரி ஒன்று தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை வள்ளியூரை அடுத்த சிறுமளஞ்சி அருகே வந்தபோது அங்குள்ள நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் வந்து மாற்று வழியில் போக்குவரத்தை திருப்பி விட்டனர். நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


Next Story