வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் கடைகளில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகரில் உள்ள டீக்கடைகள், பாஸ்ட் புட் கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பறக்கும்படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம், பெங்களூரு சாலை, சேலம் சாலை, பழைய சப்-ஜெயில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பாஸ்ட் புட் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு பயன்படுத்திய 10 வீட்டு உபயோக சிலிண்டர்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனா்.
Related Tags :
Next Story