பாப்பிரெட்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றி


பாப்பிரெட்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றி
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாநில சிலம்பம் போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு பாரம்பரிய சிலம்ப சங்கம் மற்றும் தமிழ்நாடு கலைத்தாய், அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 4-ம் வகுப்பு மாணவன் அசராகார்க்கி, 5-ம் வகுப்பு மாணவி நார்த்திகா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் ஜூனியர் பிரிவில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு பிரிவில் வெற்றி பெற்று வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, உதவி ஆசிரியர் பழனியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story