தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி


தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி
x

தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் நிறுவனத்தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ்ஜெயமணி போட்டியை தொடங்கி வைத்தார். சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, தூத்துக்குடி மாவட்ட இளஞர் மற்றும் விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜன், தெற்கு மண்டலத்தலைவர் கார்த்திக், அமைப்பு செயலாளர் பார்த்திபன், தேசிய செயலாளர் ராஜ், மாநில துணை அமைப்பு செயலாளர் பிலால் உள்ளிடோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளும், பராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


Next Story