சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்
தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமியின் பதவிக்காலம் 21-ம் தேதியுடன் நிறைவடைவதால் டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி அண்மையில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story