தினத்ந்தி புகார் பெட்டி


தினத்ந்தி புகார் பெட்டி
x

தினத்ந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

விபத்து அபாயம்

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட கனகப்பபுரம் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மைய கட்டிடம் ேசதமடைந்து சுவர்கள் மற்றும் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ராஜசேகர், கனகப்பபுரம்.

வீணாகும் குடிநீர்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வைத்தியநாதபுரம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீரசிவாஜி தெருவில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் தற்போது உடைப்பு எற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-எம்.சி.முத்துக்குமார், ஆடராவிளை.

தடுப்புவேலி தேவை

அருவிக்கரை ஊராட்சிகுட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவு வாயிலில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் வரை சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. சாலையின் ஓரத்தில் பல இடங்களில் 40 அடி வரை பள்ளமாக உள்ளது. ஆனால் இந்த சாலையில் தடுப்பு வேலி அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் ஓரத்தில் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், மாத்தூர்.

மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட லெட்சுமிபுரம் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த தொட்டியை சுற்றி பட்ட மரக்கிளைகளை போட்டுள்ளனர். இதனால் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், லெட்சுமிபுரம்.

சேதமடைந்த சாலை

ஞாலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பள்ளிகொண்டான் அணை உள்ளது. இந்த அணைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ். ஞாலம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடுகன்பற்றில் இருந்து சாமிதோப்பு செல்லும் சாலையில் கவர் குளம் தேரிவிளை ெரயில்வே கிராசிங் உள்ளது. இந்த பகுதியில் ஒரு கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு சுவர் சாலையின் மட்டத்திற்கு சமமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் தடுப்பு சுவரை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.


Next Story