தினசரி சந்தை வியாபாரிகள்நகராட்சி ஆணையாளரிடம் மனு


தினசரி சந்தை  வியாபாரிகள்நகராட்சி ஆணையாளரிடம் மனு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி தினசரி சந்தை வியாபாரிகள் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை வியாபாரிகள் நேற்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன், மாநில இந்து யாதவர் சங்கத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் சென்றனர். அங்கு ஆணையாளர் ராஜாராமை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில், நகரசபை தினசரி சந்தையில் உள்ள வியாபாரிகள் ஓராண்டுக்கான வாடகையை முன் படமாக கட்டி இருக்கிறோம். எங்கள் கடைகளை மராமத்து செய்து நல்ல நிலையில் வைத்துள்ளோம். தினசரி சந்தையை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். இதை விட்டால் எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை. எங்களுக்கு மாற்று இடத்தில் அனைத்து வசதிகளுடன் கடைகள் கட்டிக் கொடுத் தால், இந்த இடத்தை விட்டு சென்று விடுவோம். அதன்பின் கடைகளை இடித்துவிட்டு, புதியகட்டிடம் கட்டலாம், என ெதரிவித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையாளர் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கூறியதன் பேரில் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


Next Story