தினத்தந்தி செய்தி எதிரொலி-மேலூரில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் அழிப்பு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக மேலூரில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் அழிக்கப்பட்டன.
மேலூர்,
தினத்தந்தி செய்தி எதிரொலியாக மேலூரில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் அழிக்கப்பட்டன.
திடீர் சோதனை
உணவு பொருட்களில் அதிகரித்து வரும் கலப்படம் என்ற தலைப்பில் தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில் உணவு பொருட்களில் கலப்படம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், எந்த பொருட்களில் எல்லாம் கலப்படம் செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தி எதிரொலியாக மதுரை மாவட்டம் மேலூர் நகரில் உணவகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் என அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ரசாயனம், கலர் பொடிகள் பயன்படுத்தப்பட்ட 13 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பெண்கள் பள்ளி பகுதி பாலத்தில் ரசாயனம் பயன்படுத்திய வாழைப்பழங்கள் விற்பனை செய்ய வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நடவடிக்கை
இதுபோன்ற சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் எனவும், யாரேனும் தவறுகள் செய்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புகார் அளிக்கலாம்
இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 9944098527 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உணவு பாதுகாப்பு அதிகாரி பாண்டியராஜ் தெரிவித்தார்.