பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
புகாா் பெட்டி பகுதி
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோபியை அடுத்த கருக்கம்பாலி ரோட்டில் சாலையோரம் குப்ைப கொட்டப்பட்டு உள்ளது. அந்த குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த குப்பையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரும்புகை எழும்புவதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருக்கம்பாலி.
வேகத்தடை வேண்டும்
அறச்சலூர் அருகே பள்ளியூத்தில் இருந்து மண்கரடு செல்லும் சாலையில் லிங்காத்தாகுட்டை பஸ் நிறுத்தத்தில் உள்ள 4 ரோடு சந்திப்பில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் 4 ரோடு சந்திப்பில் உடனே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், லிங்காத்தாகுட்டை.
பஸ் வசதி
அத்தாணியில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். கோபி சென்று அங்கிருந்து ஈரோடு செல்ல வேண்டியுள்ளது. எனவே அத்தாணியில் இருந்து ஈரோட்டுக்கு அரசு பஸ் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், அத்தாணி.
ரோட்டில் பள்ளம்
ஈரோடு பெரியவலசுவில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே ரோட்டில் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. உடனே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரியவலசு.
நாய்கள் தொல்லை
கொடுமுடி பழைய பஸ் நிலைய ரோட்டில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி
ஆபத்தான கட்டிடம்
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி இருட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி பழமையான ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதன் மேற்கூரை கரையானால் அரிக்கப்பட்டு விழுந்து விடும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கூரையை சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இருட்டிபாளையம்
பாராட்டு
மொடக்குறிச்சி 46 புதூர் அருகே பெரிய செட்டிபாளையத்தில் சமீபத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் போது ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய் உடைந்து போனதால் குடிநீர் வீணாகியது. மேலும் குழிகளும் மூடப்படாமல் இருந்தது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரிய செட்டிபாளையம்.