தினமும் உயர்வு; தமிழகத்தில் 692 பேருக்கு கொரோனா


தினமும் உயர்வு; தமிழகத்தில் 692 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று புதிதாக 367 ஆண்கள், 325 பெண்கள் என மொத்தம் 692 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 367 ஆண்கள், 325 பெண்கள் என மொத்தம் 692 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 306 பேர், செங்கல்பட்டில் 122 பேர், திருவள்ளூரில் 48 பேர் உள்பட 31 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 7 மாவட்டங்களில் மட்டும் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 111 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.

தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 171 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,696 பேரும், செங்கல்பட்டில் 717 பேரும் உள்பட 3 ஆயிரத்து 522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story