பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா்பெட்டி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி
ரோட்டில் ஓடும் கழிவுநீர்
ஈரோடு சூளையில் இருந்து முதலிதோட்டம் செல்லும் சாலையில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவவாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும்.
தேவா, ஈரோடு.
பயன்படுத்தப்படாத கழிவறை
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்குள் பொது கழிப்பிடம் உள்ளது. புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடந்தது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் இல்லாமல் உள்ளது. பயன்படுத்தாததால் அங்கு புதர் மண்டி கிடக்கிறது. எனவே இந்த கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சுத்தப்படுத்தி, தண்ணீர் வசதி செய்து தருவார்களா?
சுகன்யா, ஈரோடு.
தாறுமாறான சாலை
கோபி அனுமந்தராயன் கோவில் வீதியில் தெப்பக்குளம் அருகில் தார்சாலை தாறுமாறாக உள்ளது. இந்த வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். தரமில்லாத சாலையால் நாள்தோறும் விபத்து நடக்கிறது. அதிகாரிகள் இதை உடனே சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விஸ்வம், கோபி.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் நஞ்சகவுண்டம்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் 4 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அள்ளிச்செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், பாரியூர்.
தூர்வாரப்படுமா?
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு திரு.வி.க. திடல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் குப்பைகளை கொட்டியுள்ளார்கள். செடி, கொடிகள் அதில் முளைத்துவிட்டன. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த கிணற்றை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
ஆற்றுநீர் வேண்டும்
பவானி அருகே தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது புதுகாடையம்பட்டி. இங்குள்ள 11-வது வாா்டில் சத்தி செல்லும் சாலையில் காடையம்பட்டி பிாிவு உள்ளது. இங்குள்ள மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்பட்ட உப்புத்தன்மை மிகுந்த நீா்தான் குடிநீராக வழங்கப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாாிகள் தளவாய்ப்பேட்டை கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் வினியோகிக்கப்படுகிற சுத்திகாிக்கப்பட்ட ஆற்றுக்குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுகாடையம்பட்டி.
------------------