தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

அடிபம்பால் ஏற்படும் விபத்து

கரூர் மாவட்டம் நடையனூர் அருகே சொட்டையூர் பகுதி பொதுமக்களின் நலன் கருதி ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு அதில் அடிபம்பு பொருத்தப்பட்டு பொதுமக்கள் அந்த அடிபம்பிலிருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். தார்சாலை விரிவாக்கத்தின் போது அடிபம்பு அருகே தார் சாலை போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் ஏராளமான வாகனங்கள் இரவு நேரங்களில் அடிபம்பு இருப்பது தெரியாமல் அடிபம்பில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிபம்பை மாற்றியமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திக், நடையனூர, கரூர்.


Next Story