தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குண்டும், குழியுமான சாலைகள்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர், ஆர்.எஸ்.புரம், காட்டுப்புதூர், இந்திராநகர், பொன்மலைப்பட்டி, உறையூர் என பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளதால் தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக காணப்படுவதுடன் குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

வீணாகும் குடிநீர்

திருச்சி பெரியமிளகுபாறை, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை, அந்த குடிநீர் தொட்டியில் நிரப்பி அதனை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் தொட்டி நிரம்பியும் குழாயை மூடாமல் உள்ளதால் குடிநீர் தொட்டி வழிந்து குடிநீர் சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இதனால் பெருமளவிலான குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் தெரு குழாய்களில் இருந்தும் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் மேடான பகுதியில் வசிக்கும் மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரியமிளகுபாறை, திருச்சி.

குடிநீர் குழாயில் உடைப்பு

திருச்சி - அரியமங்கலம் கோட்டம் 44-வது வார்டு ஆயில்மில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மேலக்கல்கண்டார் கோட்டைக்கு இடைப்பட்ட கணேசபுரம் 7-வது குறுக்குத் தெருவில் புதிதாக பாதாள சாக்கடை வசதிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்து குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த வழியாக குடிநீர் வீணாகி வருவதினால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இகுதுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுவாமிநாதன், அரியமங்கலம், திருச்சி.


Next Story