தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கரூர் -ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் ஆசாரி பட்டறை அருகே உப்புப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் இருந்து குப்பம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதன் காரணமாக உப்புப்பாளையம் பிரிவு சாலையில் இருந்து குப்பம் வரை போடப்பட்டுள்ள தார் சாலை நெடுகிலும் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த தார் சாலையை சீரமைத்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுப்பிரமணி, உப்புபாளையம், கரூர்.
ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்படுமா?
கரூா் மாவட்டம், காணியாளம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறாா்கள். மேலும் இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூாி, மின்சார வாாிய அலுவலகம் என உள்ளன. தனியாா் வங்கி, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு கிராம வங்கி என 2 வங்கிகள் உள்ளன. இந்த பகுதி இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் கரூா் உள்ளிட்ட நகரப்பகுதி தொழில் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வேலைக்கு செல்வோா்களுக்கு அவர்களின் வங்கி கணக்கின் மூலமே தொழில் நிறுவனங்கள் சம்பளம் வழங்குகின்றன. இப்பகுதி விவசாயிகள் பலரும் கறவைமாடுகள் வளர்த்து அவற்றின் பாலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாா் நிறுவனகளுக்கு விற்று வருகின்றனர். இந்த பால் கொள்முதலுக்கான தொகையை கூட்டுறவு சங்கமும், தனியாா் நிறுவனங்களும் விவசாயிகளின் வங்கி கணக்கில் தான் பட்டுவாட செய்கின்றன. இப்படி பலரும் வங்கி கணக்கில் வரும் பணத்தை இங்குள்ள தனியாா் நிதி அமைப்பின் ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமே எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த எந்திரம் பல நேரங்களில் செயல்படாமையால் பொதுமக்கள் பொிதும் அவதிபடுகின்றனர். இதனால் இங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அமைத்து தர வங்கிகள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காணியாளம்பட்டி, கரூர்.