தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தெருவிளக்குகள் இல்லாததால் அவதி

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதியில் யாரேனும் இறந்தால் அந்த உடலை அடக்கம் செய்வதற்கு இரவு நேரங்களில் மயானத்திற்கு கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளின் இருபுறங்களில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மணிமாறன், கரூர்.

பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் பஞ்சாயத்து வெ.விரகாலூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். இந்தநிலையில் அரியலூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு உள்ளே செல்வதற்கு தார்சாலை போடும் பணி கடந்த ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

வைஷ்ணவி, அரியலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், இளையபெருமாள் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சத்திரம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், தெருக்களில் கழிவுநீர் மழைநீர்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டு அசோக்நகர் விரிவாக்கம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சாரதி, புதுக்கோட்டை.

வடிகால் வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், மேலதானியம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிேறாம்.

முகமதுபாலு, மேலத்தானியம்

பூங்கா முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி அருகே சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள், சிறுவர்கள் வந்து தங்களது பொழுதை கழித்து செல்கின்றனர். இந்தநிலையில் பூங்காவின் முன்பு ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரம்யா, பெரம்பலூர்


Next Story