தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்து அட்டாகாசம் செய்வதுடன், சாலையின் குறுக்கு நெடுக்குமாக சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் திருச்சி வழித்தடத்தில் சென்று வந்த பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால் இப்பகுதி மக்கள் குறித்த நேரத்திற்கு வெளியூர் சென்றுவர பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.Next Story