தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க வேண்டும்

கருங்கலில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் எட்டணி பகுதியில் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில் குமார், கருங்கல்.

வழிகாட்டும் பலகை தேவை

சுங்கான்கடையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் வழியில் பார்வதிபுரம் மேம்பாலம் உள்ளது. இந்த பகுதியில் நாகர்கோவில், வடசேரி, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்ல வழிகாட்டும் பலகை இல்லை. இதனால் வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்களில் வருகிறவர்கள் பாலத்தின் எந்த வழியாக செல்வது என்ற குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வழிகாட்டும் பலகை அமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-எஸ்.ராஜன், களியங்காடு.

தொற்றுநோய் பரவும் அபாயம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடை மீன்கடை சாலையோரம் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மேற்கொண்டு குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

சேதமடைந்த சாலை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தெங்கம்புதூரில் இருந்து பால்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல வருடங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆல்பர்ட், பால்குளம்.

விபத்து அபாயம்

கீழகல்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்தியறைதோட்டம் மணக்கரை பகுதியில் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.

-மதிஷ் நாகமணி, ஆழ்வார்கோவில்.

சுகாதார சீர்கேடு

பருத்திவிளை சந்திப்பில் இருந்து வைராகுடியிருப்பு ஆடராவிளை வழியாக ஈத்தாமொழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வைராகுடியிருப்பு பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் பின்புறம் சாலை ஓரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சி.முத்துக்குமார், ஆடராவிளை.


Next Story