தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் வட்டம் அரசந்தம்பட்டி கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அரசந்தம்பட்டி, புதுக்கோட்டை.

மாடுகளால் தொல்லை

புதுக்கோட்டை நகர பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினாலும், இரு சக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதினாலும் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.


Next Story