தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ரெயில்வே தரைப்பாலத்தில் பெரிய பள்ளம்

புதுக்கோட்டை மாவட்டம், பள்ளத்துப்பட்டி கிராமத்திற்குட்பட்ட பள்ளத்துப்பட்டி, பாலண்டாம்பட்டியை இணைக்கும் ரெயில்வே தரைப்பாலம் சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதினால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தரைப்பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பிரபு, பள்ளத்துப்பட்டி, புதுக்கோட்டை.

பன்றிகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள சின்னஅரிசிக்கார தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கண்ணன், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை.


Next Story