தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், இடையப்பட்டி ஊராட்சி இடையப்பட்டியில் இருந்து சூரக்குளம் செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் தற்போது சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருவதுடன் வாகனங்களில் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகிவிடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பழனிசாமி, இடையப்பட்டி, புதுக்கோட்டை.

தூர்வாரப்படாத வாய்க்கால்கள்

புதுக்கோட்டை நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்ந்துபோய் உள்ளதாலும், ஆக்கிரமிப்புகளாலும் கழிவுநீர், மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மழை பெய்யும் முன்பே வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜா, புதுக்கோட்டை.


Next Story