தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா சித்துபாண்டுரான்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து லெட்சுமணப்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளாமான பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், லெட்சுமணப்பட்டி, புதுக்கோட்டை.
தெரு நாய்களால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அதே வேளையில் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. ஆகவே உரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய்களை பிடித்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை.