தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி குறுக்குச்சாலை, அண்ணா நகர், உன்னூத்துப்பாளையம், பங்களா நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஒவ்வொரு தெருக்களுக்கும் தனித்தனியாக குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிலர் திருட்டு தனமாக மோட்டார் அமைத்து குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வேட்டமங்கலம், கரூர்.

சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் தார் சாலை ஓரத்தில் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் மருத்துவகழிவுகளையும் கொட்டி வருகின்றனர். கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து, மாத்திரைகளையும், மருத்துவக் கழிவுகளை அகற்றி அவற்றை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மண்மங்கலம், கரூர்.


Next Story