தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் கிராமத்தில் கயர்லாபாத் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைக்காக இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பை சுற்றி மின்விளக்கு மற்றும் சுற்று சுவர் இல்லை. இதனால் இப்பகுதியில் பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கயர்லாபாத், அரியலூர்.


Next Story