தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

விளைபொருட்களால் விபத்து அபாயம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதி வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையை பொதுமக்கள் விவசாய பொருட்களை காய வைப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலையில் உள்ள விவசாய பொருட்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி, அரியலூர்.


Next Story