தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரில் கொம்மேடு செல்லும் சாலையில் மின்சார கம்பிகள் தாழ்வாக உள்ளது. எனவே மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரி அதிகாரிகள் புதிதாக ஒரு மின்கம்பம் அமைத்து தாழ்வான மின்கம்பிகளை சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிடப்பட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், சரி செய்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
சித்ரா, ஜெயங்கொண்டம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் எம் எம் நகர், வெங்கடாசலபதி நகர் உள்ளது. இங்குள்ள தெருக்களில் ஆங்காங்கே வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. மேலும் இந்த குப்பைகளும் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
குமர குருபரன், பெரம்பலூர்.