தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Jun 2022 12:37 AM IST (Updated: 27 Jun 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புங்கோடையில் இருந்து வேட்டமங்கலம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார்கள், லாரிகள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுப்பிரமணி ,வேட்டமங்கலம்.

குறுகிய பாலத்தை அகலப்படுத்த கோரிக்கை

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் புகழூர் வாய்க்கால் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்ல க்கூடிய அளவிலான குறுகிய சிறிய பாலம் கட்டப்பட்டது. அந்த வழியாக அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். விளைபொருட்களையும், இடுபொருட்களையும் இந்த பாலத்தின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான பாலத்தை பெரிய அளவிலான பாலமாக மாற்றி நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு பாலத்தை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரூர்.


Next Story