தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோரை நாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் தெருவில் செல்லவே அச்சப்படுகின்றனர். மாலை நேரங்களில் குழந்தைகள் தெருவில் விளையாட செல்லும் போது நாய்கள் துரத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருபா, அரவக்குறிச்சி.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தளிஞ்சி கிராமம் டி.மேலப்பட்டியில் நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டியில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், டி.மேலப்பட்டி, கரூர்.


Next Story