தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், 32-வது வார்டு தோப்புத்தெரு பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதினால் அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் சிறுவர்களை நாய்கள் துரத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களின் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தோப்புத்தெரு, திருச்சி.
சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் பிள்ளாபாளையம் கிராமம் பறையர் தெருவில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இதனால் மழைக்காலங்களில் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பிள்ளாபாளையம், திருச்சி.