'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதாரக்கேடு

நெல்லை கோர்ட்டு எதிரே உள்ள காமராஜ் நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைகாலங்களில் மழைநீர் செல்ல திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வடிகால் தூர்ந்து போய் இருந்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரின் தெற்கு பகுதியில் குழிதோண்டப்பட்டு, கழிவுநீர் சீராக சென்றது. தற்போது அந்த பகுதியில் வீசப்படும் கழிவு பொருட்களால் மீண்டும் வடிகாலில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீர் செல்லாமல் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சண்முகசுந்தரம், காமராஜ் நகர்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

நாங்குநேரி தாலுகா தான்தோன்றி கிராமம் 11-வது வார்டு வடக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சுரேஷ், தான்தோன்றி.

குப்பைகள் அகற்றப்படுமா?

பாப்பாக்குடி ஒன்றியம் மைலப்புரம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் கிணறு அருகே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதன் அருகில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இந்த குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மோகன், மைலப்புரம்.

வேகத்தடை வேண்டும்

பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு-கக்கன்நகர் இடையே நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாரியப்பன், சாந்திநகர்.

சாக்கடை தூர்வாரப்படுமா?

பாளையங்கோட்டை 34-வது வார்டு மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் கழிவுநீர் சாக்கடையில் குப்பைகள் அதிக அளவில் கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, இதில் கிடக்கும் குப்பைகளை அள்ளவும், சாக்கடையை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

ராஜா முகம்மது, பாளையங்கோட்டை.

சாலையின் நடுவே மின்கம்பம்

தென்காசி கூலக்கடை தெருவில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும், அந்த மின்கம்பத்தில் மின்விளக்கும் எரிவதில்லை. இதுகுறித்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

முகைதீன் பிச்சை, தென்காசி.

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டியில் பயணிகள் நிழற்கூடம் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி இந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டுகிறேன்.

திருக்குமரன், கடையம்.

குண்டும், குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பஜார், பிள்ளையன்மனை பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

ஈஸ்டர்ராஜ், பிள்ளையன்மனை.

பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுமா?

கோவில்பட்டி 21-வது வார்டு செல்லப்பாண்டியன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுப்பதற்கு முன்பாக இந்த கற்கள் பதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் பேவர் பிளாக் கற்களை அகற்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே சாலை பள்ளமாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள், நடந்து செல்பவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, பள்ளமாக உள்ள இடங்கள் பேவர் பிளாக் கற்களை பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story