தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான புளியமரம்

கரூர் மாவட்டம், தோகைமலை யூனியன் ஆபீஸ் தென்புறத்தில் மணப்பாறை-குளித்தலை சாலையில் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. இந்த புளியமரம் காய்ந்த நிலையில் இருப்பதால் அவ்வபோது மரத்தின் கிளைகள் முறிந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காயத்ரி, தோகைமலை.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

கரூா் மாநகரில் பல்வேறு இடங்களில் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிகிறது. மேலும் இந்த மாடுகளில் சாலையில் படுத்து தூங்குகிறது. சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டைப்போட்டு கொள்கிறது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முருகன், கரூா்.


Next Story