தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், ஆமூர் ஊராட்சி கல்யாணசுந்தரம் நகர் பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடை வடிகாலில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை வடிகாலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
எரியாத தெருவிளக்குகள்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், வேங்கூர் பஞ்சாயத்து கீழ முருக்கூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் ஏராளமான தெருவிளக்குகள் உள்ளன. ஆனால் அதில் எந்த விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இளங்கோவன், கீழமுருக்கூர்.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கீழமஞ்சமேடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லாமல் ஆங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதுடன் ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
காயத்ரி, திருச்சி.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி தீரன்நகர் அருண்நகர் 4-வது தெரு செல்லும் சாலையில் குடிநீா் ெதாட்டி அருேக மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டுகள் பூச்சுகள் பெயர்ந்து எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
செல்வி, தீரன்நகர்.