'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைக்கூளமாக மாறிய கால்வாய்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மெயின் பஜார் வழியாக மணிமுத்தாறு பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் கால்வாய் கரையில் ஆக்கிரமிப்புகளும் பெருகி விட்டது. எனவே குப்பைக்கூளமாக மாறிய கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வாருவதுடன், அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். மேலும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-மாரிமுத்து, பெருமாள்நகர்.

வேகத்தடை அவசியம்

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-பழனிசாமி, சேரன்மாதேவி.

திறந்து கிடக்கும் மின்இணைப்பு பெட்டி

கூடங்குளம் வடக்கு பகுதியில் நான்கு ரோடு சந்திப்பு பஸ் நிறுத்தம் கிழக்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி திறந்த நிலையில் தாழ்வாக உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் மின்இணைப்பு பெட்டி திறந்து கிடப்பதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்இணைப்பு பெட்டிக்கு மூடி அமைத்து பூட்டி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-சந்திரன், கூடங்குளம்.

தெருவிளக்கு தேவை

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஸ் நிறுத்தத்திற்கு வடக்கு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு தெருவிளக்குகள் அமைக்கப்படாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சுகாதாரக்கேடு

அம்பை தாலுகா மூலச்சி கிராமம் வடக்கு தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-காளிமுத்து, மூலச்சி.

சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரெயில்வே கேட் தெருவில் உள்ள ரேஷன் கடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து உணவுப்பொருட்களை பெற்று செல்கின்றனர். எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அம்ஜத், முதலியார்பட்டி.

காவலாளி நியமிக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் உள்ளன. ஆனால் அங்கு காவலாளி இல்லாததால், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே பள்ளிக்கூடத்துக்கு காவலாளி நியமிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஜெயக்குமார், திருச்செந்தூர்.

குண்டும் குழியுமான சாலை

ஏரல் அருகே சிவகளை பெரியமடை பகுதியில் இருந்து பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோவில் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதேபோன்று பேட்மாநகரம்- ஏரல் இடையேயும் சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம்- ஏரல் சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், சாலையோர முட்செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மாணிக்கம், சிவகளை.

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

கோவில்பட்டி காளியப்பர் தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பழைய சாலையை தோண்டினர். பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், குண்டும் குழியுமான சாலையில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story