தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க வேண்டும்

கன்னியாகுமரி- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் இருந்து பொற்றையடி-கோட்டையடிக்கு ஒரு பிரிவுச்சாலை செல்கிறது. இந்த சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம் தாஸ், இடையன்விளை.

நாய்கள் தொல்லை

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஹோம் சர்ச் பகுதியிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் அருகிலும் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், வாகனங்களில் வரும்போது திடீரென குறுக்கே பாய்வதுமாக உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.தர்மராஜன், அனந்தபத்மநாபபுரம்.

தடுப்புச்சுவர் தேவை

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனியநகரில் உள்ள சாலையில் வளைவான பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த விபத்து தடுப்புச்சுவர் சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்டது. அதன்பிறகு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தின் ஓரத்தில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.அப்துல் ரசாக், இனயம்.

விபத்து அபாயம்

கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து சேதமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தி.கனக சபாபதி, கொட்டாரம்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

குலசேகரம் நாகக்கோடு பகுதியில் இருந்து அருமனை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகம் செல்கின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

-பேபிஜாண், திற்பரப்பு.

சீரமைக்க வேண்டும்

சாமிதோப்பில் இருந்து பொற்றையடி செல்லும் சாலையில் கரும்பாட்டூர் ெரயில்வே கிராசிங் உள்ளது. இந்த கிராசிங்கின் இரண்டு புறமும் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.


Next Story