தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் மழைநீர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆதிச்சனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தநிைலயில் பள்ளிக்கு செல்லும் வழியில் மழைநீர் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக ெசல்ல மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கேட்டுக் ெகாள்கிேறாம்.
பொதுமக்கள், ஆதிச்சனூர்.
சேதமடைந்த இரும்பு தடுப்புகள்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி- முத்துவாஞ்சேரி வரை நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்தனர். பின்னர் சாலை வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் ரூ.87 லட்சத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் வி.கைகாட்டி-நாகமங்கலம் இடையே இரும்பு தடுப்புகள் சேதமடைந்து சாலை ஓரமாக கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி
பாலம் சரிசெய்யப்படுமா?
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தில் பெரிய ஓடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வானங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் ஒரு பகுதி தடுப்புச்சுவர் உடைந்து விட்டது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வெண்மான்கொண்டான்
அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் ஒரே ஒரு மருத்துவர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பணியில் உள்ளார். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரையான் குறிச்சி.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
அரியலூர் நகரில் பல்வேறு இடங்களில் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிகிறது. மேலும் இந்த மாடுகளில் சாலையில் படுத்து தூங்குகிறது. சில நேரங்களில் ஒன்றோடு ஒன்று சண்டைப்போட்டு கொள்கிறது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரியலூர்.