தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 14 திப்பிரான் தொட்டி தெருவில் ஒரு வீட்டின் ஒட்டி மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் இரவு நேரத்தில் சிலர் ஏறி வீட்டின் உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, வீட்டினை ஓட்டியுள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

வடிகால் வசதி வேண்டும்

திருச்சி கே.கே.நகர் டி.எஸ்.என். அவென்யூ பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சரியாக வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.கே.நகர்.

வாய்க்கால் பாலம் அகலப்படுத்தபடுமா?

திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள இரட்டைவாய்காலில் உள்ள நடைபாதை இருபுறமும் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பாலத்தின் வழியாக வரகனேரி உள்பட பல்ேவறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வரகனேரி.

கழிவுநீரை வாய்க்காலை தூர்வார வேண்டும்

திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள தெருவில் கழிவுநீர் வாய்க்கால் சரியாக துர்வாரப்படாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பொன்னம்பட்டி.

தேங்கி நிற்கும் மழைநீர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி உள்ள சாலைகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மழைநீர் தேங்கி குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வந்ததால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், சமயபுரம்


Next Story