தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

எரியாத மின்விளக்குகள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர் பஞ்சாயத்தை சேர்ந்த வைகை காலனி 3-வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருவில் சுமார் 5-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் தெருவில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், லால்குடி

ஆபத்தான பள்ளம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தெரு எதிரே காந்திநகர் செல்லும் தார் சாலையின் குறுக்கே சிறியபாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அருகே ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் சாலையின் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தொட்டியம்,

கிடப்பில் போடப்பட்ட கட்டிட பணி

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூர் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு கட்டிடம் ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பணம் தொடங்கப்பட்ட ஒரு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், உப்பிலியபுரம்

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

திருச்சி ெசந்தண்ணீா்புரம் வள்ளூவா் நகா் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ெசந்தண்ணீர்புரம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வில்லியம்ஸ் சாலையில் ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தில் உடைந்த பகுதியில் சிமெண்டு வைத்து பூசி சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், திருச்சி


Next Story