தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குடிநீர் தொட்டியை விரைந்து கட்ட கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பரமன்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணி கடந்த 6 மாதங்களாக தொடங்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

பாழடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

புதுக்கோட்டை மாவட்டம், மாங்காட்டில் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மகளிரின் பயன்பாட்டிற்காக மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி பாழடைந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் வழியாக செல்லும் பஸ்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைகளுக்கு செல்லும் பொதுக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள், புதுக்ேகாட்ைட.

உடைந்த நிலையில் மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதுப்பட்டி மெயின் ரோட்டில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் உடைந்த நிலையில் எப்ப வேண்டுமாலும் கீழே நிலையில் உள்ளது. இதனால் இந்த ரோட்டின் வழியாக ஏராளமான பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மின்சார வாரியத்தினர் உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுப்பட்டி

பாழடைந்த குடியிருப்புகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் தங்குவதற்கு என்று குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவதுறை அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். தற்போது இந்த குடியிருப்புகளில் யாரும் குடி இல்லாமல் பாழடைந்து உள்ளது. இதனை புதுப்பித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.


Next Story