தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

கரூா் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும்மக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூா்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மினி பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் சாலை நீண்ட நாட்களாகவே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மினி பஸ் டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சிலர் கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூா்.

பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள காந்தி சிலை அருகே திருச்சி - கரூர் செல்லும் சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக நின்று பஸ்சில் பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட இந்த பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். ஆனால் இந்த நிழற்குடை பகுதியில் எந்த பஸ்களும் நிற்பதில்லை. அதற்கு மாறாக பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையோரம் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி இறக்கி விடப்படுகின்றனர். இதனால் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை பயனற்று பலர் இளைப்பாறும் இடமாக மாறிவிட்டது. எனவே இந்தப் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே பஸ்களை நிறுத்திச் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், குளித்தலை

பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பாலத்தின் ஒரே பகுதியில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மோகன், குளித்தலை

மூடப்பட்ட ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் நொய்யலில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே நிலையம் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி, கரூர் மற்றும் ஈரோடு, கோவை, பாலக்காடு செல்லும் பயணிகள் ஏறி இறங்கி வந்தனர். இந்நிலையில் பயணிகள் ரெயிலில் ஏறி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ரெயில் நிலையம் பூட்டப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழரசன், நொய்யல்.


Next Story