தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

அவசர சிகிச்சை பிரிவை மாற்றவேண்டும்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தரைதளத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த அவசர சிகிச்சை பிரிவு மாடிக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மேலே கொண்டு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவசர சிகிச்சை பிரிவை முன்பு இருந்ததுபோல் தரைதளத்திற்கு மாற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரை சேகரிக்க முடியாததால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.

தெருநாய்களால் கீழே விழும் வாகன ஓட்டிகள்

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுகளை நாய்கள் துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.

பள்ளி முன்பு கொட்டப்படும் குப்பைகள்

அரியலூர் மாவட்டம், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதினால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நவின்குமார், செங்குந்தபுரம்.

போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் நகரப்பகுதியில் ஒரு சில இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி வருகின்றன. இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.


Next Story