தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை-திருச்சி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகனங்களில் வேகத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுப்பகுதியில் இரண்டு இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, துவார் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிகுலப்பன்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், துவார்.


தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் வடக்கு பெரியார்நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வெட்டுக்காடு கிராமம் மகுதுப்பட்டி குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பழைய கோவிலின் தெற்கு பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரேனும் மின்கம்பியை தொட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மகுதுப்பட்டி.

தெருவிளக்குகள் எரிவதில்லை

புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டு அசோக்நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இங்கு சாலைகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அசோக்நகர்.


Next Story